திருப்பூர் அக்:7
திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகிலுள்ள தனியார் மண்டபத்தில்மக்கள் உரிமை கழகம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் சபரி ராஜ் தலைமையில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது,
இந்த கூட்டத்தில் மது ஒழிப்பிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உட்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,
இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநில அமைப்பாளர் வைகோ மாரிமுத்து,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் எம். மாதேஸ்வரன்,மாவட்ட தலைவர் கிருஷ்ணன்,மாவட்ட செயலாளர் பாலாஜி உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.