ஊத்தங்கரை காவல் துறை சார்பில் உலக மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்.
ஊத்தங்கரை,மார்ச்.8: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, ஊத்தங்கரை உட்கோட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சார்பு நீதிபதி முகமது அலி தலைமை வகித்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். குற்றவியல் நடுவர் சஹானா, மாவட்ட உரிமையியல் நீதிபதி அமர் ஆனந்த், ஊத்தங்கரை டி எஸ் பி சீனிவாசன்,அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மராத்தான் ஓட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தொடங்கி முக்கிய சாலை மற்றும் வீதி வழியாக பேரூராட்சி மண்டபத்திற்க்கு சென்றனர். மாரத்தான் ஓட்டத்தில் அதியமான் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் வித்யா மந்திர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் என 500}க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்தும், சமூக வலைதளங்களை தொடரும் தகவலை நம்பி ஏமாறக்கூடாது, தெளிவாகவும் விழிப்புணர்வுடன் தைரியமாக இருக்க வேண்டும், எதிர்காலம் மாணவிகளுக்கு கல்வியே பாதுகாப்பு என அறிவுரை கூறினர். இதில் காவல் ஆய்வாளர்கள் ஊத்தங்கரை முருகன், கல்லாவி ஜாபர் உஷேன், மத்தூர் பத்மாவதி உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
படவிளக்கம்.8யுடிபி.1.2. ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தொடங்கிய மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைக்கின்றார் ஊத்தங்கரை சார்பு நீதிபதி முகமது அலி. 2. மாரத்தான் ஓட்டத்தில் கலந்துக்கொண்ட கல்லூரி மாணவிகள்.