தஞ்சாவூர் மே.12
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், பட்டுக்கோட்டை கும்பகோணம் ஆகிய 702 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது 35 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு, வருகிறது அதன்படி இந்த ஆண்டு ஆய்வு தஞ்சாவூர் காவல் துறை ஆயுத படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் ஒவ்வொரு வாகனமாக ஏறி சுப்ரீம் கோர்ட் சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத் தலின் பள்ளி வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா ?நல்ல முறையில் இருக்கிறதா? படிக்கட்டுகள் ,தீ தடுப்பான் என ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர் மேலும் பள்ளி வாகனங்களுக் கான அனுமதி சீட்டு , தகுதி சான்று, காப்பு சான்று, புகை சான்று, வரி சான்று, வேகக் கட்டுப்பாட்டு கருவி பயன்பாடு நிலை, ஜி.பி.எஸ். கருவி பயன்பாடு, முதலுதவி பெட்டியில் மருந்துகள் இருப்பு நிலை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நெறிமுறை கள் குறித்தும், பள்ளி வாகனங் களில் அவசர வழி முறையாகவும், அதை திறப்பதில் சிரமம் உள்ளதா? எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஏர் ஹாரன் பொருத்தப்பட்டிருந்த வாகனங்களிலிருந்து ஏர் ஹாரன் கழட்ட சொல்லி அறிவுரை வழங்கியதுடன், போக்குவரத்து விதிகளுக்கு மாறாக ஏர்ஹாரன் பொருத்துவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் டிரைவர்கள் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் .பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சையில் 452 வாகனங்கள், பட்டுக்கோட்டையில் 334 வாகன ங்கள், கும்பகோணத்தில் 225 வாகனங்கள் என மொத்தம் 1011 வாகனங்களுக்கு அனுமதி சான்று வழங்கப்பட்டிருந்தது .ஆனால் 702 வாகனங்கள் மட்டுமே ஆய்வுக்கு வந்திருந்தது .இதில் 35 வாகனங் களில் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக டிரைவர்களுக்கு செவித்திறன், கண்பார்வை பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயசங்கர் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை துணை கலெக்டர் (பயிற்சி) சங்கரநாராயணன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், தாசில்தார் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.