ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில்,சிவில் இன்ஜினியரிங் மற்றும் கட்டிடக்கலை துறை சார்பில் “சிவில், மெட்டீரியல் மற்றும் கட்டிடக்கலை வடிவமைப்பில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்” (ஐசிஆர்ஐஎஇடி 2024) என்ற தலைப்பில் ,
யுனிவர்சிட்டாஸ் இஸ்லாம், இந்தோனேசியா, ரங்சிட் பல்கலை, தாய்லாந்து, சமர்கண்ட் பல்கலை, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஃபாத்திஹ் சுல்தான் மெஹ்மத் வாகிஃப் பல்கலை, துருக்கி ஆகியவற்றுடன் இணைந்து,
இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
துணைத் தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த், மாநாட்டை துவக்கி வைத்தும்,” ஸ்மார்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்ட மையத்தைத் “திறந்து வைத்தும் பேசினார்.
வெவ்வேறு துறைகளுடன் இணைந்த கூட்டு ஆராய்ச்சி அவசியம் என வலியுறுத்தினார் துணை தலைவர் .
துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன், ஆர் & டி இயக்குனர் முனைவர் எம்.பள்ளிகொண்ட ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிவில் துறைத்தலைவர் பி.எல். மெய்யப்பன் வரவேற்புரையும்.
கட்டிடக்கலை துறைத்தலைவர் எல்.வினுபாண்டியன், இரண்டு நாள் மாநாட்டின்
நிகழ்ச்சி விளக்கவுரையும்.
வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் சென்னை மெட்ரோ, நிப்பான் கம்பெனி ஆலோசகர்,இஆர். எஸ். அறிவுசெல்வன், “மாநாட்டு ஆராய்ச்சி கட்டுரை மலரை “வெளியிட்டு பேசினார்.
கெளரவ விருந்தினர் இந்தோனேசியா பல்கலை, ஏஆர். ராபி மக்சயா,
யுனிவர்சிட்டாஸ் இஸ்லாம் இந்தோனேசியா, பேராசிரியர் முஹம்மது இப்திரோனி மற்றும் டாக்டர் ஜார்வா பிரசேத்யா, சென்னை பாலாஜி அசோசியேட்ஸ் முனைவர் எல். பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் உட்பட 65 பிரதிநிதிகள் விவாதங்கள் மற்றும் விளக்கக்காட்சிகளில் பங்கேற்றனர்.
நிறைவு விழாவில், தலைமை விருந்தினர் , இந்திய பொறியாளர்கள் நிறுவனங்களின் மதுரை மைய தலைவர் , முனைவர் பி.உதயகுமார், அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
டீன் முனைவர் எஸ்.ராஜேஷ் வரவேற்றார்
ஏஆர். அஹமத் ஃபஸீல் அக்ரம் நன்றி கூறினார்.