தென்காசி மாவட்டம் தென்காசி எல்ஆர்எஸ் பாளையம் 12 வது வார்டில் ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாய் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் பின்பு 12 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் பூமாதேவி ,மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் குத்துவிளக்கேற்றினர் .
நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி நகர் மன்ற துணைத் தலைவர் சுப்பையா, தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் சந்தோஷ் , தென்காசி நகர காங்கிரஸ் துணைத் தலைவர் சித்திக், நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், தென்காசி நகர காங்கிரஸ் பொருளாளர் ஈஸ்வரன் ,முஸ்தபா, பிரபாகரன், தேவேந்திரன், பாலு என்ற சண்முகவேல், தியாகராஜன்மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்