குளச்சல் நவ 29
குமரி கிழக்கு மாவட்ட மீனவ காங்கிரஸ் மாவட்ட தலைவர் தலைமையில் வயநாடு எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவி ஏற்றுக்கொண்டதற்கு பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பிரியங்கா காந்தி தன்னைத் தேர்ந்தெடுத்த மாநிலமான கேரளாவின் பரம்பரிய ஆடை அணிந்து மக்களவையில் வயநாடு எம்.பி.யாக அரசியல் சாசனத்தை கையில் வைத்துக்கொண்டு பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து
குமரி கிழக்கு மாவட்ட மீனவ காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்டாவின் தலைமையில் நேற்று குளச்சல் பீச் ஜங்சனில் வைத்து பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்சியல் மீனவ காங்கிரஸ் மாவட்ட செயல் தலைவர் லாலின் முன்னிலை வசித்தார், சிறப்பு விருந்தினராக குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர், யூசுப்கான், பிரான்சிஸ், தர்ம ராஜ், மற்றும் மீனவரணி மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் ராபின், வானியாகுடி பஞ்சாயத்து மீனவரணி தலைவர் பென்சிகர், உட்பட பலர் கலந்து கொண்டனார்..