கிருஷ்ணகிரி ஜூலை 7: கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சிபிஎஸ்சி பள்ளியில் 24-25 ஆம் ஆண்டிற்கான மாணவர் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. வேளாங்கண்ணி பள்ளி குழும்பங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளியின் நிறுவனரும் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினருமான தம்பிதுரை கலந்துகொண்டு மாணவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சி தான் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை மாணவனாக சரண், தலைமை மாணவியாக யாத்ரா, விளையாட்டுத்துறை தலைமை மாணவியாக நிஷா, கலாச்சாரத்துறை தலைமை மாணவியாக ஜெபிரீன் சாரா, பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்துறை தலைவியாக சந்தியா, ஆனந்த குழு தலைவராக லட்சிதா ஸ்ரீ, துணைத் தலைவராக கோகுல், தீரஜ் குழு தலைவராக ஜென்சி, துணைத்தலைவராக ஸ்ரீராம், பிரேம் குழு தலைவராக கிருத்திகா, துணை தலைவராக அரவிந்த் குமார், சாந்தி குழு தலைவர் கீர்த்தனா, துணைத் தலைவராக முகமது பாரீஸ், ஆகியோர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இந்தாண்டு முழுவதும் பதவிலிருந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி கல்வி, ஒழுக்கம், விளையாட்டு, என அனைத்து பிரிவுகளிலும் தங்கள் குழுவினரை வழி நடத்துவார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், ஜெயபால், வெற்றிச்செல்வன், மாதையன், ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளி முதல்வர் விஜயலட்சுமி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



