சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான குண்டு எறிதல் போட்டியில் சங்கரன்கோவில் விண்மீன்கள் இல்ல குழந்தை வெற்றி பெற்று சாதனை எம்எல்ஏ ராஜா பாராட்டு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ளது விண்மீன்கள் சிறப்பு குழந்தைகள் காப்பகம் இந்த காப்பகத்தில் சுமார் 57 சிறப்பு குழந்தைகள் இருந்து வருகின்றனர். இந்த குழந்தைகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி, டேட்டா என்ட்ரி(தரவு உள்ளீடு)பயிற்சி, தரை பாய் செய்யும் பயிற்சி, விளையாட்டு பயிற்சி, காகித பூக்கள் செய்யும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சிகளை காப்பகத்தில் பணிபுரியும் விமல்பியூலா, ஆரோக்கிய மேரி தமிழ்ச்செல்வி ஆகியோர் இந்த சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த காப்பகத்தை சேர்ந்தவர் பவித்ரா (23) இவர் கடந்த 21ஆம் தேதி சென்னையில் நடந்த சிறப்பு குழந்தைகளுக்கான முதலமைச்சர் கோப்பை 2024 விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டு 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கமும், ரூபாய் 50,000 ரொக்கப்பரிசும் பெற்றார். சென்னையில் நடந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்த சிறப்பு குழந்தை பவித்ராவிற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் காப்பக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



