திருப்பூர் – பாண்டியன் நகர் அருகே, பொன்னம்மாள் நகர், பொன்மலர் வீதியை சேர்ந்தவர் சத்தியப்பிரியா. இவரது சகோதரர் சரவணன். இவர் நம்பியூரில் கோவில் திருவிழாவில் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகளை தயார் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது பண்டிகை காலம் என்பதாலும், அவரது லைசென்ஸ் காலாவதியானாதாலும் இங்குள்ள தனது சகோதரி சத்தியப்பிரியா வீட்டில் சகோதரி வாயிலாக சட்ட விரோதமாக வெடியை தயார் செய்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று வீட்டில் வழக்கம்போல் வெடியை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராவிதமாக வெடித்தது. இதில் வெடியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் சத்தியப்பிரியா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் வெடியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீடும், எதிர்புறமாக இருந்த லைன் குடியிருப்புகளும் என 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. மேலும் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் காயமடைந்ததாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீயணைப்புத்துறையினர் பாதிப்படைந்த பகுதிகளை சரிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்தின் போது பெருத்த சத்தமும், அதிர்வையும் உணர்ந்ததாக அப்பகுதியில் கூடிய ஏராளமான பொதிமக்கள் தெரிவித்தனர்.
நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics