மார்த்தாண்டம் பிப்.17-
2026-ல் இந்தியா கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெரும் என குழித்துறையில் தமிழக காங். தலைவர் செல்வ பெருந்தகை கூறினார்
தமிழக காங். தலைவர் செல்வப் பெருந்தகை குழித்துறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி அலுவலகம் காமராஜர் பவனை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது ;
எங்களுக்கு புதிய கல்விக் கொள்கையில் உடன்பாடு இல்லை, இந்த கல்வி கொள்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, பொதுப் பட்டியல் கல்விக் கொள்கை உள்ளது. மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து முடிவு செய்ய வேண்டும்.
தன்னிச்சையாக செயல்பட முடியாது. முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி மும்மொழிக் கொள்கையை நவோதயா பள்ளிகளை முன்மொழிந்த போது தமிழகத்தில் எதிர்த்தனர். அதற்காக மத்திய அரசு நிதி வழங்க மாட்டோம் என எப்போதும் கூறவில்லை
புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தமிழக முதல்வரின் குரல் அது, தமிழக மக்களின் குரல். பழிவாங்கும் விதமாக நிதி வழங்க மாட்டோம் என்றால் அது ஆணவத்தின் உச்சம்
தமிழகத்தில் பொறுத்தவரையில் ஜவஹர்லால் நேரு ஆட்சி காலத்திலேயே மும்மொழி கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று அப்போது தமிழகத்தில் ஆங்கிலம், தமிழ் என்ற இருமொழி கொள்கையைத்தான் தமிழக அரசு கடைப்பிடித்தது.
மக்களுக்கு நீட் வேண்டாம் என்றாலோ , மும்மொழி கொள்கை வேண்டாம் என்றாலோ விட்டுவிட வேண்டும்
இது மத்திய அரசின் கூட்டாட்சியின் தத்துவத்தை மத்திய அரசு மீறுவதாகும்
டெல்லி, கும்பமேளா, மணிப்பூர் போன்ற இடங்களில் நெரிசலில் சாவதும், படுகொலை செய்யப்படுவதும் நடந்து வருகிறது. ஆனால் பா ஜ அரசு கண்டு கொள்ளவில்லை
2026 இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும், காங்கிரஸ் கட்சி பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. காங் இல்லாத கிராமமே இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பயணத்தை மேற்கொள்கிறோம்
முதலமைச்சர் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் , தமிழக முதலமைச்சர் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக
உள்ளார்.
சிவராத்திரிக்கு சிவபக்தர்களுடன் சேர்ந்து அவர்களின் கோரிக்கையான அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்பதில் நானும் இணைந்து கொள்கிறேன்
இவ்வாறு தமிழக காங். தலைவர் செல்வப் பெருந்தகை கூறினார்
பேட்டியின் போது குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் பினுலால் சிங் ,விஜய் வசந்த் எம் பி, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் ஏ, தாரகை கத்பட் எம் எல் ஏ, பிரின்ஸ் எம் எல் ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.