தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் பணி புரிவது தெரிய வந்தால் 1098 ல் புகார் செய்யலாம்
தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் தெரிவித்தார்.
தஞ்சாவூர். பிப்.9.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் பணி புரிவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது.
தஞ்சாவூர்,கும்பகோணம் பட்டுக்கோட்டை பாபநாசம் ஆகிய பகுதிகளில் ஜனவரி மாதத்தில் 151 கடைகள் நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்)சட்டத்தின் படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை களை எந்த ஒரு பணியிலும் 14 வயது நிறைவடைந்த, ஆனால் 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான அனைத்து வகையான தொழில் களிலும் பணி அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் குழந்தை தொழிலாளர் களைப் பணிக்கு அமர்த்தும் வேலை அளிப்பவர்களுக்கு ரூபாய் 20,000 முதல் ரூபாய் 50,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப் பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவரும் பணி புரிவது கண்டறியப்பட்டால் சைல்டு லைன் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ, தொழிலாளர் அலுவலகத்தின் 04362 – 264886 என்ற தொலைபேசி எண்ணிலோ புகார் செய்யலாம்..