தேனி ஆகஸ்ட் 23:
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள அரண்மனை புதூரில் சதீஷ்குமார் அஜிதா தம்பதியினர் 5 வயது குழந்தையுடன் வசித்து வந்தனர் மேலும் அஜித்தா என்பவர் கர்ப்பமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த இரு நாட்களாக இவர்களின் வீடு பூட்டியே இருந்ததில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் மனைவி மற்றும் மகள் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தனர் கணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.