சேலம்,செப்.06
மனித உரிமைகள் கழகம் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம் இணைந்து நிறுவன தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் தினேஷ்குமார் ஆகியோர் பரிந்துரையின் பேரில் சேலம் மண்டல நிர்வாகிகள் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வ உ சி 153 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு,புத்தகம், பேனா,பென்சில்,இனிப்புகள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாநில இணைப் பொதுச் செயலாளர் எஸ்.கே.பி பார்த்திபன், தலைமை கழக பொறுப்பாளர் சாத்தியப்பா, மாநில துணை பொதுச் செயலாளர்கள் அய்யனார், கோவிந்தராஜ், இளைஞர் அணி செயலாளர் நவீன் குமார், கரிகாலன், மற்றும் நிர்வாகிகள் பிரபாகரன்,சுரேந்தர்,சண்முகம், விக்னேஷ்,கணேஷ்,நல்லதம்பி, நடேசன், மாவட்ட பொறுப்பாளர்கள் செந்தில்குமார் கணபதி தேவகுமார். அம்மு லதா மற்றும் கட்சி நிர்வாகிகள் பல பங்கேற்றனர்.



