ஈரோடு அக் 8
ஈரோடு பெரியசேமூர் மற்றும் சூளை பகுதி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது . சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அருகே இருந்து சூளை வரை நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு பகுதி செயலாளர்கள் எம் ஜி பழனிச்சாமி தங்கமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர்
இதில் நிர்வாகிகள் தாமோதரன், சசி, முருகன், துரை
மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்தும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது பாலியல் பலாத்காரம் அதிகரித்து விட்டது போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் மற்றும் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த மனித சங்கிலி போராட்டம் நடந்தது.