வேலூர்=09
வேலூர் மாவட்டம் ,பகவான் மஹாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் மாணவர்களுக்கான மேற்கல்வி பயில தொழில் சார்ந்த கல்வி முறை பற்றிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மருதர் கேசரி ஜெயின் அறக்கட்டளையின் மூத்த தலைவர் ஸ்ரீ விமல் சந்த் ஜெயின் மற்றும் தலைவர் ஸ்ரீ திலிப் குமார் ஜெயின் அவர்களும் பங்கேற்று விழாவினை துவக்கி வைத்து தலைமையுரையாற்றினர். பள்ளியின் செயலாளர் ஸ்ரீ கே.இராஜேஷ்குமார் ஜெயின் அவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக டாக்டர். ஜி. பி. கணபதி உயர் கல்வி தரம்) பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மையம், விஐடி பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் கே.கணேசன் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர், விஐடி, வேலூர் ஆகியோர் கலந்துக் கொண்டு, மாணவர்கள் மேற்கல்வி பயில தொழில் சார்ந்த கல்வி முறை பற்றிய வழிக்காட்டு திட்டம் குறித்து சிறப்பு உரையாற்றினர். உடன் பள்ளியின் முதல்வர் எம்.மாலதி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.