தஞ்சாவூர் மே.17.
தஞ்சாவூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2024 -2025 கல்வியா ண்டில் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்கள்அனைவரும் உயர் கல்வியில் சேர்வதற்கான கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் ஊரகம், தஞ்சாவூர் நகரம், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர், மற்றும் அம்மாபேட்டை ஒன்றியத் தை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
இதன் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அண்ணாதுரை வரவேற்றார் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலுடன் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் துணை கலெக்டர் (பயிற்சி) சங்கர நாராயணன் கலந்து கொண்டு பேசினார்
மேலும் துறை சார்ந்த வல்லுனர் கள், சட்டம் ,பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவி யல் தொழில்பயிற்சி நிறுவனங் களில் வழங்கப்படும் பாடப்பிரிவு களில் உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள். மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில்நுட்ப மருத்துவம் சட்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாலிடெக்னிக் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து மாணவர் களுக்கு வழிகாட்டினார்கள்
பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி கனவு கையேடு வழங்கப்பட்டது. உயர் கல்வி நிறுவனங்கள் வழங்கும் உதவித்தொகை மற்றும் உயர் கல்வி சேர்வதற்கு வங்கிகள் வழங்கும் கல்வி கடன் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது நிறைவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர்கள் மாதவன், பழனிவேல், முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் தட்சிணா மூர்த்தி, தஞ்சாவூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் செயல்பட்டனர்.



