தஞ்சாவூர். மார்ச் 31
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா பஞ்சநதிக்கோட்டையில் ரூ.141 இலட்சம் மதிப்பீட்டில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்
அர.சக்கரப்பாணி திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் நெற்பயிர்களுக்காக சுமார் 3000 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொரு காரிப் சீசனிலும் திறக்கப்படுகின்றன. அதில் 90 சதவீதம் டெல்டா மாவட்டத்திலேயே செயல் படுகின்றன. தற்போது ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத் திலும் விவசாயிகளிடம் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 40 மெட்ரிக் டன் 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. உச்ச அறுவடை காலத்தில் இது தற்போதைய தேவைக்கு போது மானதாக இல்லை. எனவே, கொள்முதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவில் உள்ள பஞ்சநதிக்கோட்டை கிராமத்தில் அமைத்துள்ள நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ஒன்றில் முன்னோடி திட்டமாக ரூ.141 இலட்சம் மதிப்பீட்டில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நன்மைகள் என்னவென்றால் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும் நெல் வயலில் இருந்து நேரடியாக மூட்டை இல்லாமல் டிராக்டர், டிப்பர் மூலமாக நெல்லை அதிதிறன் கொள்முதல் நிலையத்தில் பெற முடியும். இதனால் கொள்முதல் மையத்திற்கு கொண்டு வரும்போது சாக்கு பயன்பாட்டை குறைக்கலாம். அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தொடர்ச்சியான கொள்முதல் செயல்முறை தயாரிப்புக்காக உயர்த்தி (எலிவேட்டர்) மூலமாக நேரடியாக சேகரிப்பு முனைக்கு மாற்றப்படும் அதன் கொள்ளளவு சுமார் 16 மெட்ரிக் டன் ஆகும்.
இதை சுத்தம் செய்யும்போது மாசுக்கட்டுப்பாடு பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக சேகரிப்பு முனையிலிருந்து நெல் சுத்தம் செய்யப்படுகிறது. சூறாவளி தூசி தயாரிப்பான் இதில் இணைக்கப். பட்டுள்ளது. சுத்தம் செய்தல் மற்றும் தரப்படுத்துதல் செயல்முறைக்கு பிறகு நெல் சேமிப்பு முனைக்கு இயந்திரத்தனமாக மாற்றப்பட்டு சேமிப்பு முறையிலிருந்து நெல் நேரடியாக தானியங்கி எடை மற்றும் தானியங்கி பேக்கிங் மூலம் மூட்டையாக தைக்கப்பட்டு
கன்வேயர் மூலம் லாரிக்கு ஏற்றப்படுகிறது. இதனால் விவசாயிகளின் நெல் சிந்தாமல் சிதறாமல் பத்திரமாக எடை போடப்பட்டு அதற்கு உண்டான பணப்பட்டுவாடாவும் செய்யப் படுகிறது. இவ்வாறு செய்வதால் நெல் போக்குவரத்தை விரைவுப் படுத்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மிகவும் உபயோக மாக இருக்கும் இந்த இயந்திரத் தின் கொள்ளளவு ஒரு மணி நேரத்திற்கு 15 டன் எடுத்துக் கொள்ளும். மேலும், ஒரு நாளைக்கு சுமார் 10 மணி நேரம் கொள்முதல் செய்யும் போது 150 மெட்ரிக் டன் அதிவிரைவாக கொள்முதல் செய்யலாம் இதனால் விவசாயி களில் காத்திருக்கும் நேரம் குறையும். என்றார்.
விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் சொல்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை சந்திரசேகர ன் டி கே ஜி நீலமேகம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் சண்முக சுந்தரம் முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் தலைமை பொறியாளர் வெங்கடேசன் மற்றும் முன்னாள் எம். எல்.ஏக்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ண சாமி, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக் கண்ணன் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்
அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics