தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உதவி யானை மாவுத்தராக பணிபுரிந்து கடந்த 18.11.2024 அன்று திருக்கோயில் யானை தெய்வானை தாக்கியதில் உயிரிழந்த ச.உதயக்குமார் என்பவரின் வாரிசுதாரரான மனைவி R.P.ரம்யா என்பவருக்கு திருக்கோயிலில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம் பகவத், அவர்கள் தலைமையில் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார். இந்நிகழ்வின்போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் பெரிய சாமி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் , அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.
இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics