ஊட்டி. ஜன. 07.
நீலகிரி குந்தா ஒன்றியம் பிக்கட்டி பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சிறுத்தை தாக்கி சதீஷ்குமார் 32 வயது இளைஞர் உயிர் இழந்தார்
தகவல் அறிந்து உடனடியாக தனது இல்லத்திற்க்கு சென்று மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் அவர்கள் சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர்
மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்ததோடு குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார் . குடும்பத்தாரின் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் ஊர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் உடனடியாக அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்திட வேண்டும் என வலியுறுத்தினார் உடன் குந்தா கிழக்கு ஒன்றிய செயலாளர் வசந்தராஜன் எடக்காடு பேரூராட்சி கழக செயலாளர் தர்மராஜ் பாசறை மாவட்ட செயலாளர் அக்கிம்பாபு எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ் உட்பட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். எடக்காடு பகுதியில் சிறுத்தை புலி தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.