சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.
இந்த பத்தாம் கட்ட அகழாய்வு பணியின் போது ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு வருகிறது இதில் பல பாசிமணிகளும் விளையாட்டு பகடைக்காய்களும் மற்றும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன இன்று ஒரு குழியில் பழங்காலத்தில் தமிழர்கள் தானியங்கள் சேர்த்து வைப்பதற்காக குழுமை பானை பயன்படுத்தியுள்ளன அந்தக் குழுமை பானை ஒன்று கிடைக்கப்பட்டுள்ளது இதிலிருந்து பண்டைய கால தமிழர்கள் தானியங்களை சேர்த்து வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்று தெரிய வருகிறது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.