தஞ்சாவூர். டிச.20.
தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள எல்.ஐ.சி வளாகத்தில் உள்ள யுனைடெட் இண்டியாஇன்சூரன்ஸ் கம்பெனி கோட்ட அலுவலகத்தின் வெளியில் அகில இந்திய ஓய்வூதியர் தினமான ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு ஓய்வூதிய சங்க செயற்குழு உறுப்பினர் ராகவன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியத்தில் முன்னேற்றம், வங்கி மற்றும் எல்.ஐ.சி யில் உள்ளது போல் குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதமாக உடனடியாக வழங்க கோரியும், மருத்துவ காப்பீட்டு பிரிமியத்திற் கான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் பிரபு, தஞ்சாவூர் கோட்டகாப்பீட்டு கழக ஊழியர் சங்கத் தலைவர் செல்வராஜ், ஜெயராஜ், சத்தியநாதன் ஆகியோர் ஓய்வூதியர் தினத்தை வாழ்த்தியும், கோரிக்கைகளை விளக்கியும் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பொது காப்பீடு நிறுவனமான யுனைடெட் இந்தியா நேஷனல், நியு இண்டியா, ஓரியண்டல், ஆகிய காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், பொது காப்பீட்டு கழகஓய்வூதியர்கள், காப்பீட்டு கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.