மதுரை மார்ச் 6,
மதுரை அழகர் கோயிலில் கஜேந்திர மோட்சம் மற்றும் தெப்பத்திருவிழா
மதுரை, மாவட்டம், மேலூர் வட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில், 1434 பசலி 2025 ஆண்டு கஜேந்திரமோட்சம் மற்றும் தெப்பத்திருவிழா 12.03.2025 முதல் 14.03.2025 வரை நடைபெறவுள்ளது. இதில் 13.03.2025ம் அழகர்கோயிலில் மாலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் கஜேந்திர மோட்சத்திருவிழாவும், 14.03.2025 தேதியன்று தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. மேற்படி தெப்ப உற்சவ நாளான 14.03.2025 தேதியன்று காலை 07.31 மணிக்கு மேல் 08.15 மணிக்குள் ஆஸ்தானத்தைவிட்டு புறப்படும் அருள்மிகு பெருமாள் பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான தெப்பத்தில் காலை எழுந்தருளவுள்ளார். 10.35 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் எழுந்தருளவுள்ளார். கோவில் நிர்வாக
துணை ஆணையர்/செயல் அலுவலர்
ந.யக்குநாராயணன் தெரிவித்துள்ளார்.