ஊட்டி. டிசம். 07.
நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக காலநிலை மீட்டெடுத்தல் பசுமை நீலகிரி 2024 இன்று திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளி, புனித மரியன்னை ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, உபதலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பல மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி அல்போன்சா தலைமை வகித்தார். தொழிலதிபர் தாஜுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் கே ஜே ராஜு அவர்கள் செய்திருந்தார். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.