பரமக்குடி,ஜூன்.3 : பரமக்குடியில் தமிழக அரசு சார்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை எம்எல்ஏ முருகேசன் வழங்கினார்.
தமிழக அரசு சார்பாக அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து அரசு பள்ளிகளிலும் நேற்று இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் பரமக்குடி எமனேஸ்வரம் ஜீவா நகரில் செயல்பட்டு வரும் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் எமனேஸ்வரம் எஸ் என் வி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர்கள் ரூபி சாந்தகுமாரி, தர்மராஜ் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட கல்வி அலுவலர் சேதுராமன், வட்டார கல்லூரி அலுவலர் ஜோசப், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் தலைமை வகித்தனர். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மாணவ மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வடக்கு நகர் கழக செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் ஜீவரத்தினம், வார்டு செயலாளர் சுப்பிரமணி, நகர் மன்ற சீனிவாசன் உள்பட மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.