வேலூர்-30
வேலூர் மாவட்டம், வேலூர் பலவன்சாத்துகுப்பம் 55வது வார்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விஜய் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் இலவச மருத்துவ முகாம் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையிலும் வெங்கட் ,லோகேஷ், ஹரி ,ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது .இதில் தன்யா மெடிக்கல் சென்டர் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் மருத்துவர் பச்சிளம் குழந்தை பராமரிப்பு பற்றியும், பெண்களுக்கு வரும் புற்றுநோய் பற்றிய அறிகுறிகள் கண்டறியும் முறை மற்றும் தடுப்பு முறைகளுக்கான மருத்துவ ஆலோசனைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார் . உடன் நவீன், யுவராஜ், அகிலன், ராஜசேகர் ,கார்த்திக், ஆனந்த் பாபு, லலித்குமார், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ,பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.