விண்மீன் இல்ல ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் ஜி,வி, கண் மருத்துவமனை சார்பில் நடை பெற்றது/
சங்கரன்கோவிலில் விண்மீன் இல்ல ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் என் ஜி ஓ காலனியில் இயங்கி வரும் எலும்பு மற்றும் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது இலவச கண் பரிசோதனை முகாம்
கண்மருத்துவர் திருமதி.பூர்ணிமா பாலவிக்னேஷ், எம்பிபிஎஸ், டி,ஒ,டி,என்,பி, தலைமையில் குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது
மேலும் முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பார்வை திறன் மற்றும்
கண்ணில் ஏற்படக்கூடிய கண்புரை,கண் எரிச்சல்,கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான சிகிச்சை அளித்து தகுந்த நபர்களுக்கு கண் கண்ணாடி வழங்குவதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் எலும்பு முறிவு மருத்துவர்.திரு.பாலவிக்னேஷ் எம்,எஸ், ஆர்த்தோ, மருத்துவமனை மேலாளர் கார்த்திக் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.