நாகர்கோவில், ஜூலை – 28,
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பொன்மலை திருமலை மண்பாண்ட தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுக்குட்பட்ட அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்து அவற்றினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மண்டபாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவி தொகை, விலையில்லா மண்பாண்ட சீலிங், மின்விசை சக்கரங்கள், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மண்பாண்ட தொழிலாளர்களின் பொருளாதாரநிலை மேம்பட கிராமபகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சீலாவில் மின்விசை சக்கரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மொத்தம் 286 விலையில்லா சீலாவில் மண்டபாண்ட சக்கரங்கள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இத்திட்டத்தினை முதலாவதாக கிராமப்புறங்களிலும், அடுத்தபடியாக பேரூராட்சிகள். நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் மொத்தம் 286 மண் பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.1142 இலட்சம் மதிப்பில் விலையில் மண்பாண்ட Fami மின்விசைச் சக்கரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று சுங்கான்கடை பொன்மலை திருமலை மண்பாண்ட தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது. ஒரு விலையில்லா சீலாவில் மின்விசை சக்கரத்தின் விலை ரூ.20.400 ஆகும். எனவே இத்திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திட வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள். குறிப்பாக கல்வி உதவித்தொகை, மகளிர் விடியல் பயணம், தொழில் முனைவோராக மாற வேண்டுமென்ற நோக்கில் வங்கிகள் மூலமாக கடனுதவிகள், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள கிராமப்புற மக்கள், வோர பகுதி மக்கள் மற்றும் மவைளைழ் கிராமப்புற மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு, சுமார் 45 வருடங்களாக கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சுமார் 12.000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கியுள்ளார்கள் என்பதை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்கள்.
அதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா மண்டபாண்டங்கள் தயாரிப்பதனை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்
நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (காதி) எபனேசர், நாகர்கோவில் உள்ளூர் திட்டக்குழும் உறுப்பினர் மரியசிசுகுமார். மண்பாண்ட தயாரிப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் உள்ளார்கள்.