தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் பயிலும் 35 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டியினை தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர்,தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் வழங்கினர் . பின்னர் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஊக்கத்தொகை வழங்கினார் .நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், ஈஸ்வரன், பாலாமணி , சுப்பிரமணியன், பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரன்,பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் ஜானகிராமன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



