சிவகங்கை:நவ:29
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பழையனூர் திருப்பாச்சேத்தி ஆகிய மேல்நிலைப் பள்ளிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் வழங்கினார்.
திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கீழடி வெங்கடசுப்பிரமணியன் பழையனூர் சுப்பிரமணியன் திருப்பாச்சேத்தி ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பேசிய சேர்மன் சேங்கை மாறன் மிதிவண்டி மற்றும் இலவச பஸ் பாஸ்களை வழங்கியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்தான் எனவும் தெரிவித்தார் .
சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் மிதிவண்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கி பின்னர் பள்ளிக்கல்வித்துறைக்கென ஏராளமான பல நல்ல திட்டங்களை திராவிட மாடல் ஆட்சியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்துவருவதாகவும் இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பல எண்ணற்ற திட்டங்களை
செய்து வருவதாக தெரிவித்தார்.