திண்டுக்கல்
ஜூலை:02
சென்னை மேக்ட் நிறுவனத்தின் சார்பாக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்திய அளவில் இணைய வழி போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 15 மாநிலத்திற்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு
பரிசளிப்பு விழா சென்னை எக்மோரில்
உள்ள சென்னை சமூக பணிக்கான கல்லூரி ஸ்டேடியத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.இவ்விழாவிற்கு மேக்ட் நிறுவனத்தின் இயக்குனர் சிரில் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து புகையிலைக்கு எதிரான குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பணியை செய்து வரும் திண்டுக்கல் காருண்யா அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர் ஜேரோம் அருள்ராயன் அவர்களுக்கு புகையிலைக்கு
எதிரான குழந்தைகள் CAT விருதை தமிழ்நாடு சுகாதாரப் பணிகளின் இயக்குனர் டாக்டர். செல்வவிநாயகம் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் சிறப்பித்தார். நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகளின் இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் , அடையார் புற்றுநோய் மருத்துவமனையின்
டாக்டர். சுரேந்திரன் , இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் மகேஸ்வரர் , சென்னை மருத்துவ சங்கத்தின் தலைவர் ப்ரனவ் பாலாஜி , தமிழ்நாடு
புகையிலை
கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து , சைல்டு
வாய்ஸ் நிறுவனர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியின் முடிவில் மேக்ட் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் எட்டோலின் நன்றி கூறினார்