அரியலூர், ஜூலை:13
அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளிக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வெள்ளி கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 75 மனுக்கள் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. இக்;குறைத்தீர்க்கும் கூட்டத்தில் 02 நபர்களுக்கு தலா ரூ.2,00,000 என மொத்தம் ரூ.4,00,000 இலட்சம் மதிப்பில் விபத்து மரணம் உதவித்தொகைகளும், 10 நபர்களுக்கு இயற்கை மரண ஈமச்சடங்கு நிதி உதவித் தொகையாக தலா ரூ.17,000 என மொத்தம் ரூ.1,70,000 மதிப்பிலான உதவித் தொகைகளும், 02 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,000 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகளும், மேலும் காதொலி கருவி வேண்டி இம்முகாமில் மனு அளித்த ஒரு மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக ரூ.3600 மதிப்பிலான காதொலி கருவிகளும் என மொத்தம் 15 நபர்களுக்கு ரூ.5,88,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுலவர் வ.சீனிவாசன், முடநீக்கு வல்லுநர் அ.பெ.ஜெயராமன், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்