கருங்கல், பிப்-12
கருங்கல் பேரூராட்சியில் சிறப்பாக பணிபுரிந்துவரும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் கருங்கல் கிளை சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.
கருங்கல் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிறப்பாக பணிபுரிபவர்கள் யசோதா மற்றும் பிரகாஷ் ஆகியோரை தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் கருங்கல் கிளையினர் தேர்வு செய்தனர். இருவரையும் கௌரவிக்கும் விதமாக சங்க கூட்டத்தில் வரவழைத்து சால்வைகள் அணிவித்து கௌரவித்தும் வாழ்த்தியும் பேசினர்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் மாநில செயலர் கருங்கல் ப. அலக்சாண்டர் தலைமை தாங்கினார், கருங்கல் கிளை துணைத்தலைவர் ஜஸ்டின், பொருளாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை ஆலோசகர் ரமேஷ் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக பசித்தோர்க்கு உணவு கருங்கல் ஜார்ஜ், சமூக ஆர்வலர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
நிகழ்வில் கிளை நிர்வாகிகள் சேவியர், ரமேஷ், ஜாண் ஜோசப், ஜோணி, லூக்காஸ், கிளாடிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் ஷிபு நன்றி கூறினார்.