தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட கட்சியினர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் புறப்பட்ட கட்சியினர்:-
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து வேன், கார், பஸ் மூலம் மாவட்ட செயலாளர் என்.எஸ்.ஓ.அமீன் தலைமையில், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் அறிவரசன், மில்டன், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய தலைவர் மனோகர், தெற்கு ஒன்றிய தலைவர் ரமேஷ், மயிலாடுதுறை நகர செயலாளர் அம்பேத், நகர பொறுப்பாளர் ஆசிப், விஜய் ஆண்டனி, மாவட்ட மாணவரணி செயலாளர் ஆகாஷ், செம்பை ஒன்றிய தலைவர் ராஜா, செம்பை ஒன்றிய செயலாளர் வசந்த், உள்ளிட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் அமீன், ஆகியோர் மாலை அணிவித்து, பாதபூஜை செய்த தமிழக வெற்றி கழகத்தினர் அங்கிருந்து ஆரவாரத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். 2026 இல் வெற்றி பெற்று தமிழகத்தை நடிகர் விஜய் சுத்தம் செய்ய உள்ளதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.