வேலூர்=28
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு காங்கேயநல்லூர் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும். அதிமுக 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் 14வது வட்ட கழகச் செயலாளர் கே பி. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் கே அப்பு, மாநில அமைப்பு செயலாளர் ராமு, பகுதி செயலாளர் பி .நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர் . உடன் வண்ட்ரந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், வழக்கறிஞர் தாஸ் அதிமுக வட்ட செயலாளர் மேகநாதன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.