கன்னியாகுமரி அக் 20
வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதைத் தொடர்ந்து குமரி மாவட்ட கடல் பகுதிகளில் 65 கிலோ மீட்டர் மேல் சூறாவளி காற்று வீசும் என இந்திய கடல் தகவல் சேவை மையத்துடைய எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்நிலையில் கள்ளக் கடல் எச்சரிக்கை நிறைவடைந்தது தொடர்ந்து நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்பட்டிணம் ஆகிய துறைமுகங்களில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
ரால்மீன், கணவாய், விளைமீன் உள்ளிட்ட உயர்தர மீன்கள் அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் புறப்பட சென்றுள்ளனர் 2000 விசைப்படகுடன் 25 மேற்பட்ட நாட்டு படகுகளும் மீன் பிடிக்க சென்றுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டம் மீன்பிடி துறைமுகங்கள் மீண்டும் களைக்கட்ட தொடங்கியுள்ளது –