நித்திரவிளை, பிப்-8
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் ஃபைபர் படங்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் மண்ணெண்ணெய் கிட்டங்கி உள்ளது. இங்கு வள்ளவிைளை, மார்த்தாண்டறை, நீரோடி ஆகிய மூன்று மீனவர் கிராமங்களை சேர்ந்து சுமார் 975 படகுகளுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் பைபர் படகு வைத்திருப்பவர்கள் நான்கு லைஃப் ஜாக்கெட் வாங்க வேண்டும் என்று மீன்வளத் துறை உத்தரவிட்டது. ஆனால் இதை படகு வைத்திருப்பவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையுள் லைப் ஜாக்கெட் இருந்தால் மட்டும் தான் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மீனவர்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமானார் கிட்டங்கி முன் முற்றுகையிட்டனர்.
சம்பவ இடம்வந்த மீன்வளத்துறை ஆய்வாளர் ஜெகன் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, பயனாளிகள் அனைவருக்கும் இந்த மாதம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் என்று அறிவித்ததால் மீனவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.