களியக்காவிளை அருகே பாத்திமாநகர், குரியன்விளையில் ஸ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு நடப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும். இவ்வருடம் 12-வது பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் மற்றும் சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா அஷ்ட திரவிய மஹா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தினமும் சாலை கணபதி ஹோமம், உஷபூஜை, தோற்றப்பாட்டு, பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹாயாகம், கலசாபிஷேகம், மதியம் அன்னதானம், மாலை கலை நிஷ்ச்சிகள் நடக்கிறது.
நான்காம் நாள் திருவிழாவான நேற்று வழக்கமான பூஜைகள் பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம், கலசாபிஷேசம், நடந்தது. மாலை கோயில் வளாகத்தில் பூக்குழி இறங்குவதற்கான குண்டம் அமைக்கப்பட்டது. அதில் விறகு கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு கனல் தீ வளர்க்கப்பட்டது. தொடர்ந்து சூழால் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இருந்து தீபம் ஏற்று வாங்கி அக்னி காவடி களத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வேல் குத்து நிகழ்ச்சி நடந்தது. இதன் தொடர்ச்சியாக பூகாவடி, வேல் காவடி, சூரிய காவடிகள் முத்துக்குடை அணிவகுப்புடன் தேவியின் சுயம்பு எழுந்தருளி கோயில் மற்றும் பூக்குழழி இறங்கும் இடத்தினை வலம் வருதல் நிகழ்சியுடன் அம்மன் தீமிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பூகாவடி, வேல் கடவடி, சூரிய காவடி ஏந்தி வந்த பத்தர்கள் தீ மிதித்தனர். அந்த அற்புத காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது. அக்னி காவடி நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஸ்ரீலஸ்ரீ சடை சுவாமி ஞான தேசிகர், திருமடம் மடாதிபதி திருபாத சுவாமிகள், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் இருந்து சங்கர நடராஜ தீட்ஷித் உள்ளிட்ட சுவாமிகள், சன்னியாசிகள் பங்கேற்றனர். தொடர்ந்து புஷ்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
ஆறாம் திருவிழாவன்று பஞ்சபூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் நிறைவடைகிறது. தொடர்ந்து மஹா சண்டிகா யாகம், தேவியின் சுயம்பு எழுந்தருளல், ஸ்ரீமத் பகவத் கீதா பாராயணம், நடந்தது.
ஏழாம் திருவிழா தினம் தேவியின் சுயம்பு எழுந்தருளல், சமூக பொங்காலை, தேவிக்கும், உபதேவர்களுக்கும் புஷ்பாபிஷேகம், பூப்படை சமூக பொங்காலை, மதியம் தேவிக்கு விஷேச நாதஸ்வரம், தகில், சிங்காரி மேளத்துடன் பூப்படையும், வேதாள பீடத்தில் குருதியும் நடந்தது.
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க சூரிய காவடியுடன் தீ மிதி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics