கிருஷ்ணகிரி மாவட்டம்மாவட்டம் மகாராஜகடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுபேதார் மேடு என்ற இடத்தில் கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர் ஏலியாஸ் (43) s/o அமினிதாமஸ், எர்னாகுளம், கேரளா மாநிலம் என்பவர் இரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மகாராஜகடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டு மேற்கண்ட சம்பவயிடத்திலிருந்த CCTV கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட நபரை 1) காதார் @ காதர்பாஷா (19) s/o ஜான் பாஷா, தர்மராஜா கோவில் தெரு, கிருஷ்ணகிரி மற்றும் ஒரு இளஞ்சிறார் சேர்ந்து சம்பவயிடத்தில் இறந்தவர் காதர் பாஷாவின் இருசக்கர வாகனத்திற்கு அருகில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட பிரச்சனையால் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேற்கண்ட இருவரையும் குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து எதிரி காதர் பாஷாவை சேலம் மத்திய சிறையிலும், இளஞ்சிறாரை சேலம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.