நாகர்கோவில் ஆக 22
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ மாணவியர் மருத்துவ கல்லூரியில் இருந்து ஆனந்தம் பாலம் சந்திப்பு வரை பேரணி.
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த கொலையை கண்டித்தும் பெண்களுக்கு இச்சமூகம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ மாணவியர் மருத்துவ கல்லூரியில் இருந்து ஆனந்தம் பாலம் சந்திப்பு வரை பேரணியில் ஈடுபட்டனர். இதில் தங்கள் கோரிக்கைகளை பதாகைகளில் ஏந்திய வண்ணம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் உட்பட ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.