கமுதி பிப்.05
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி நாராயண ஊராட்சி பகுதியை சேர்ந்த கோட்டைமேடு 4 வார்டுகளை கமுதி பேரூராட்சியில் இணைக்க கூடாது என்று கோட்டைமேடு பொதுமக்கள் கமுதி நாராயண ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு முன்பாக கமுதி பேரூராட்சியுடன் கோட்டைமேடு ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. கோட்டைமேடு கமுதி பேரூராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனால் எங்களுக்கு பெரிதாக எந்த விதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என்றும் 100 நாள் வேலையை வாழ்வாதாரமாக நம்பி இருக்கும் எங்களுக்கு 100 நாள் வேலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.