கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம்
திம்மாபுரம், கால்வேஹள்ளி, சுண்டம்பட்டி, தளிஹள்ளி, பாரூர், மலையாண்டஹள்ளி, காவேரிப்பட்டிணம் என 18 ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் கே.ஆர்.பி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக தண்ணீரை கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் திறந்து வைத்தார். இதனையடுத்து விவசாயிகள் அம்மன், பையூர் 1, பையூர் 2, ஜலகரப்பொன்னி உள்ளிட்ட பல்வேறு விதமான நெல் பயிர்கள் சாகுபடி செ்துள்ளனர். அணையில் இருந்து குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் பயிர்கள் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயராகி உள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து பயிர்களும் அறுவடை செய்யப்பட்டு விடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைத்துள்ளர்.
இது குறித்து மிட்டஹள்ளி பாசன விவசாயியான சுப்பிரமணி பேசுகையில், தென்பெண்ணை ஆற்றில் வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை பெரியமுத்தூர் என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி. என்ற அணையை பெருந்தலைவர் காமராஜர் கட்டி கொடுத்தார்.
கே.ஆர்.பி. அணை மூலமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகள் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர். இதன் விளைவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு மூன்று முறை நெல்சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர். கர்ம வீரர் காமராஜ் அவர்களால் வளம் பெற்றுள்ளோம், 5 மாவட்ட மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு காரணமாக இருக்கும் பெருந்தலைவர் காமராஜருக்கு கே.ஆர்.பி. அணையில் திருவுவச்சிலை தமிழக அரசு அமைத்துக்கொடுக்க வேண்டுமென ஆயிரக்கணக்கான பாசன விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைத்தார்.