ஈரோடு பிப் 14
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வேளாண்மை உழவர் நலத்துறை, சுற்றுச்சூழல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை, உள் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சுற்றுலா, பண்பாடு இந்து சமய அறநிலையத்துறை, வேளாண்மை-விற்பனை வேளாண் வணிகத்துறை, ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கனிம வளத்துறை, தொழிலாளர் துறை, ஈரோடு விற்பனை குழு, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கைத்தறித்துறை, குழந்தைகள் நலன் (ம) சிறப்பு சேவைகள் துறை, வனத்துறை, பள்ளிக்கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட கருவூலம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்தும் துறை வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அர்பித் ஜெயின் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம் மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு துணை இயக்குநர் குலால் யோகேஷ் விலாஷ் சுதாகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது) உள்பட பலர் கலந்து கொண்டனர்.