மதுரை மேற்கு மற்றும் மத்திய மாவட்டம் சார்பாக கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழாவும் — பொங்கல் விழாவும்
மதுரை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கொத்தனார் ஆரம்பப் பள்ளியில் மாவட்டத் தலைவர்கள்
டி .ராஜாங்கம், கே.கே. நடராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய கே.எஸ்.கே. ராஜேந்திரன் புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் கலந்து கொண்டு சிறப்பு செய்த மாநில நிர்வாகிகள் அமைப்பைச் செயலாளர் காந்தி, மாநில பொதுச்செயலாளர் மலைச்சாமி, மாநிலச் செயலாளர்கள் மைதீன் பாட்ஷா, பைரவ மூர்த்தி,
மணி, மாநில இணைச்செயலாளர் சீனிவாசன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் கல்வத் நூர்தின், மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர்கள்.
கோபி பாபு, சச்சின் ஹரேஷ் பாபு, சீமான், சோலைமலை,
பொதும்பு செல்வம், மேற்கு தொகுதி துணைத் தலைவர் பரவை முத்துராமன், மாவட்ட பொருளாளர்கள் சூசை, ஜெயராஜ்,
மாவட்ட துணைத் தலைவர் மாணிக்கவாசகம், சர்க்கிள் கமிட்டி தலைவர் தங்கவேல் உட்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.