சித்தையன்கோட்டையில் சமத்துவ இப்தார் விருந்து நிகழ்ச்சியில், அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டார்.
செம்பட்டி அருகே, சித்தையன்கோட்டையில் சமத்துவ இப்தார் விருந்து நிகழ்ச்சியில், சனிக்கிழமை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, சித்தையன்கோட்டை பெரிய பள்ளிவாசல் சார்பாக நடைபெற்ற, சமத்துவ இப்தார் விருந்து நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டார்.
சமத்துவ இப்தார்
விருது நிகழ்ச்சியில், பெரிய பள்ளிவாசல் முத்தவள்ளி உதுமான் அலி, ஷேக் தாவூது, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு அமைப்பாளர் ரபீக், திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு முன்னாள் துணை அமைப்பாளர் மரக்காயர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் க.நடராஜன், ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் (மேற்கு) ராமன் (கிழக்கு) முருகேசன், சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் போதும்பொண்ணு முரளி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாப்பாத்தி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.