தக்கலை செப் 29
கன்னியாகுமரி மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக நேற்று மாலை 5 மணியளவில் மது, போதைக்கு எதிராக துண்டு பிரச்சுர பேரணி தக்கலை தர்ஹா முன்பு துவங்கியது, நிகழ்வை மாநில இளைஞர் அணி பொருளாளர் நெல்லை ரியாசுர் ரஹ்மான் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி மேட்டுக்கடை வழியாக அண்ணாசிலை சென்று மீண்டும் தர்ஹா முன்பு வந்து சேர்ந்தது, பேரணியின் போது போதைக்கு எதிராக துண்டு பிரச்சுரம்(நோட்டீஸ்) மக்களுக்கு வழங்கப்பட்டது,
நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நிஜாம் தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்லாணி கிராத் ஓதி துவங்கி வைத்தார், மேலும் இந்த நிகழ்வில் சிறப்புரை தலைமை பிரதிநிதி காதர் மைதீன், மாவட்ட துணை தலைவர் உவைஸ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்,
மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் ஜிஸ்தி முஹம்மது நிகழ்வை தொகுத்து வழங்கினார், மற்றும் மமக மாவட்ட செயலாளர் சித்திக் , மாவட்ட தமுமுக செயலாளர் நவாஸ் கான், பொருளாளர் அக்பர், தலைமை கழக பேச்சாளர் செய்யது அலி,துணை செயலாளர்கள் பீர் முஹம்மது, பயாஸ், அலி அக்பர், மாவட்ட தொண்டரணி நைனா முஹம்மது, தகவல் அணி செயலாளர் நிஷார், மற்றும் தக்கலை, திருவை, குளச்சல், திங்கள் நகர், நாகர்கோவில், தேங்கை, சூரங்குடி, மாதவலாயம், ஆகிய பகுதியில் இருந்து திரளாக மக்கள் கலந்து கொண்டனர், நிகழ்வின் முடிவில் இளைஞர் அணி தக்கலை நகர செயலாளர் ஆஷிப் நன்றியுரை கூறினார்.