தேனி மாவட்டம் போடி, டைல்ஸ் தொழிலாளி அல்லாபக்ஸின் மகன் ஷாகித் ஆஃபரிதி , விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. ரேடியாலஜி படித்துவருகிரார்.
இவர் ஜூலை மாதம் 17ஆம் தேதி அரை லிட்டர் தண்ணீரை மிகக் குறைந்த நேரத்தில் ஆறு வினாடியில் அருந்தி உலக சாதனை புரிந்துள்ளார்.
இவரது சாதனையை உலக ரிக்கார்டு ஆக பதிவு செய்து ,ஜெயப்பூர், ‘இன்பிளுன்சர் புக் ஆப் உலக சாதனை நிறுவனம்” இவருக்கு பதக்கங்களும் கேடயமும் வழங்கியுள்ளது.
உலக சாதனை புரிந்த மாணவர் ஷாகித் ஆஃபரிதியை பல்கலையில் நடந்த தமிழ் மன்ற விழாவில் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் , திரைப்பட இயக்குனர் ,ஏ.ஆர்.
மோகன் ,துறைத்தலைவர்
சூசன்,தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் சி.சங்கீதா பாராட்டினர்