தஞ்சாவூர் ஆகஸ்ட் 30
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களு டன் வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வருவாய் துறை ஊரக வளர்ச்சித் துறை ஊராட்சிகள் துறை சுகாதாரத்துறை கல்வித்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஒவ்வொரு துறையிலும் மேற் கொள்ளப்படுகின்ற பணிகளை துரிதமாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து அலுவலர்களும் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் உதவி கலெக்டர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.