தமிழ்நாடு ரோல் பால் மாநில போட்டி திண்டுக்கல் அனுகிரகா இண்டர் நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் அனுகிரகா இண்டர் நேஷனல் பள்ளியின் செயலாளர் என்.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் அனுகிரகா இண்டர் நேஷனல் பள்ளியின் தலைமையாசிரியை அனீஸ்பாத்திமா முன்னிலை வகித்தார்.
மாநில ரோல் பால் போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், கோவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், கன்னியாகுமரி, திருச்சி, திருநெல்வேலி, சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 600 பேர் பங்கேற்றனர். போட்டியானது 9 வயதிற்கு கீழ், 11 வயதிற்கு கீழ்,14 வயதிற்கு கீழ் என மூன்று பிரிவுகளில் 60 அணிகள் பங்கேற்றனர். இதில் திண்டுக்கல் பெண்கள் அணி முதல் இடத்தை பிடித்து பதக்கம், சூழற்கோப்பையை வென்றனர். கோவை ஆண்கள் அணி முதல் இடத்தை பிடித்து பதக்கம், சூழற்கோப்பையை வென்றனர். இந்நிகழ்வில் தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்பி.சுப்பிரமணியம்,
தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் தலைவர் பி. செல்லமுத்து,
தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் செயலாளர் சி. கோவிந்தராஜ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் பொருளாளர்
வி.ராஜசேகர், திமுக மேற்கு மாவட்ட அவைத்தலைவர் டி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். தமிழ்நாடு ரோல் பால் மாநில போட்டியை தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் துணைத்தலைவரும், திண்டுக்கல் ரோல் பால் அசோசியேசன் செயலாளருமான மாஸ்டர். எம். பிரேம்நாத் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியின் முடிவில் மதுரை ரோல்பால் அசோசியேசன் தலைவர் ரோபின் ராஜகந்தன் நன்றி கூறினார்.
ரோல் பால் மாநில போட்டி திண்டுக்கல் பெண்கள் அணி முதல் இடத்தையும், கோவை ஆண்கள் அணி முதல் இடத்தை பிடித்தது

Leave a comment