ஸ்டெர்லைட் ஆதரவு போரட்டத்திற்கு அனுமதி மறுப்பு : நீதிமன்றத்தில் அனுமதி பெற முடிவு ;-
தூத்துக்குடி மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கத்தினர் தெரிவித்தார்கள்
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கம்,12 அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு 6 சமூக ,சமுதாய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. ஆனால், ஆர்ப்பாட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்து போராட்டம் நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் குவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நல சங்கம் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எங்களது போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்று இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வாங்க உள்ளதாகவும் அவ்வாறு நீதிமன்றத்தில் அனுமதி வழங்கும் என நம்புகிறோம். அப்படி அனுமதி கிடைக்கவில்லை என்றால் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.



