ஈரோடு ஜூன் 16
அகில இந்திய ரெயில்வே ஒட்டுனர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது தலைவர் அருண்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை செயலாளர் சிவக்குமார் தொடங்கி வைத்தார் பொதுச் செயலாளர் ஜேம்ஸ் இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதில் நிர்வாகிகள் பிஜு முருகேசன் ஸ்ரீஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்
வார ஓய்வை 46 மணி நேரமாக கொடுக்க வேண்டும் என்று ஜகோர்ட்டு உத்தரவிட்டதை உடனே நிறைவேற்ற வேண்டும் பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டபடி வேலை நேரத்தை 10 மணி நேரமாக குறைக்க வேண்டும் தொடர் இரவு பணியை இரண்டாக குறைக்க வேண்டும் வீட்டை விட்டு வேலைக்கு செல்லும் ரயில்வே ஓட்டுநர்கள் இரண்டு நாளில் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது .